ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருடைய நம்பகத் தன்மையில் தமக்கு சந்தேகம் உள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்தார்.
இன்று கொழும்பில் இடம்பெற்ற கூட்டு எதிர்க் கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
நாட்டில் எழுந்துள்ள அரசியல் குழப்ப நிலைமை தொடர்பில் கலந்துரையாட நாம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திக்கச் சென்ற போது அவர் தம்மிடம் அரசியல் யாப்பைப் பார்க்க வேண்டும் எனக் கூறினார். இதனையும் அவர் மனச்சாட்சியுடன் கூறினாரா என்பது சந்தேகமாகவே உள்ளது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவுள்ள அவர் எந்தக் கட்சிக்கும் தான் உரிமையில்லையெனவும் தெரிவித்துள்ளார் எனவும் குமார வெல்கம மேலும் கூறினார்.
0 comments:
Post a Comment